இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை! விடுதலைப் புலிகள் வீழ்வதும் இல்லை!!
  • உண்மையின் தரிசனம் பாகம்-14

    1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெற்ற முதலாவது ஆயுத ஒப்படைப்பின் போது, விடுதலைப் புலிகள் தம்மிடம் இருந்த சுமார்800 ஆயுதங்களை ஒப்படைத்திருந்தார்கள். 
    ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி, புலிகளின் இரண்டாவது ஆயுத ஒப்படைப்பு இடம்பெற்றது.










    இம்முறை ஆயுத ஒப்படைப்பு யாழ் கோட்டையினுள் நடைபெற்றது.  ஆயுத ஒப்படைப்பு தொடர்பான விடுதலைப் புலி உறுப்பினர்களின் மனவோட்டம் மிகவும் மறுபட்டதாகவே இருந்தது.
    எந்தவொரு விடுதலைப்புலியும் இந்த ஆயுத ஒப்படைப்பை வரவேற்கவில்லை. மாறாக ஆயுத ஒப்படைப்பிற்கு தமது எதிர்ப்புக்களையே வெளிப்படுத்தி வந்தார்கள்.
    புலிகள், ஆயுதங்களை தமது உயிரினும் மேலாக மதித்தார்கள். நேசித்;தார்கள். சண்டைகளின் போது, எதிரியிடம் இருந்து ஒரு ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காக பல உறுப்பினர்களை இழக்கும் அளவிற்கு புலிகள் ஆயுதங்களுக்கு முன்னுரிமை வழங்கி வந்தார்கள்.
    புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில், ஒரு போராளி, ஸ்ரீலங்கா படை வீரனைச் சுட்டுக்கொல்வது பெரிய விடயம் அல்ல@ அவ்வாறு கொல்லப்பட்ட படையினனின் ஆயுதத்தை கவர்ந்து சென்று தனது பொறுப்பாளரிடம் காண்பிப்பதுதான் பாராட்டுக்குரிய ஒரு விடயமாக இருந்தது.
    அக்காலத்தில் ஸ்ரீலங்காப் படையினருடனான சண்டைகளின் போது,, புலிகள் தாம் சுட்டுத் தீர்த்த ரவைகளின் வெற்றுக் கூடுகளைக்கூடச் சேகரித்து செல்வது வழக்கம். அந்த வெற்று ரவைகளில் வெடிமருந்து நிரப்பி மீண்டும் பயன்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்துவந்தார்கள்.
    அக்காலத்தில் துரோகிகளுக்கும் சமுக விரோதிகளுக்கும் தண்டனை வழங்க போராளிகளை அனுப்பும்போது, "எம்டி (empty)  கொண்டு வா.." என்று கூறித்தான் பொறுப்பாளர்கள் அனுப்புவார்கள். குறிப்பிட்ட நபரைச் சுட்டு தண்டணை வழங்கிவிட்டு, வெற்றுத் தோட்டாவை எடுத்துக்கொண்டு திரும்பவேண்டும் என்பதே அப்போதைய நடைமுறையாக இருந்தது. அந்த அளவிற்கு புலிகள் ஆயுதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். அப்படி புலிகள் மதித்த, நேசித்த தமது ஆயுதங்களை ஒப்படைப்பதென்பது, அதுவும் தமது ஜென்ம விரோதியிடமே ஒப்படைப்பதென்பது, புலி உறுப்பினர்களால் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகவே இருந்தது.


0 comments:

Leave a Reply

கரும்புலி மறவர் களத்திலே உண்டு

john cena

சிறப்புச் செய்திகள்

வீடியோ

வரலாறு

Blogger இயக்குவது.