இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை! விடுதலைப் புலிகள் வீழ்வதும் இல்லை!!
  • உண்மையின் தரிசனம் பாகம்-14
    1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெற்ற முதலாவது ஆயுத ஒப்படைப்பின் போது, விடுதலைப் புலிகள் தம்மிடம் இருந்த சுமார்800 ஆயுதங்களை ஒப்படைத்திருந்தார்கள். 
    ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி, புலிகளின் இரண்டாவது ஆயுத ஒப்படைப்பு இடம்பெற்றது.










    இம்முறை ஆயுத ஒப்படைப்பு யாழ் கோட்டையினுள் நடைபெற்றது.  ஆயுத ஒப்படைப்பு தொடர்பான விடுதலைப் புலி உறுப்பினர்களின் மனவோட்டம் மிகவும் மறுபட்டதாகவே இருந்தது.
    எந்தவொரு விடுதலைப்புலியும் இந்த ஆயுத ஒப்படைப்பை வரவேற்கவில்லை. மாறாக ஆயுத ஒப்படைப்பிற்கு தமது எதிர்ப்புக்களையே வெளிப்படுத்தி வந்தார்கள்.
    புலிகள், ஆயுதங்களை தமது உயிரினும் மேலாக மதித்தார்கள். நேசித்;தார்கள். சண்டைகளின் போது, எதிரியிடம் இருந்து ஒரு ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காக பல உறுப்பினர்களை இழக்கும் அளவிற்கு புலிகள் ஆயுதங்களுக்கு முன்னுரிமை வழங்கி வந்தார்கள்.
    புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில், ஒரு போராளி, ஸ்ரீலங்கா படை வீரனைச் சுட்டுக்கொல்வது பெரிய விடயம் அல்ல@ அவ்வாறு கொல்லப்பட்ட படையினனின் ஆயுதத்தை கவர்ந்து சென்று தனது பொறுப்பாளரிடம் காண்பிப்பதுதான் பாராட்டுக்குரிய ஒரு விடயமாக இருந்தது.
    அக்காலத்தில் ஸ்ரீலங்காப் படையினருடனான சண்டைகளின் போது,, புலிகள் தாம் சுட்டுத் தீர்த்த ரவைகளின் வெற்றுக் கூடுகளைக்கூடச் சேகரித்து செல்வது வழக்கம். அந்த வெற்று ரவைகளில் வெடிமருந்து நிரப்பி மீண்டும் பயன்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்துவந்தார்கள்.
    அக்காலத்தில் துரோகிகளுக்கும் சமுக விரோதிகளுக்கும் தண்டனை வழங்க போராளிகளை அனுப்பும்போது, "எம்டி (empty)  கொண்டு வா.." என்று கூறித்தான் பொறுப்பாளர்கள் அனுப்புவார்கள். குறிப்பிட்ட நபரைச் சுட்டு தண்டணை வழங்கிவிட்டு, வெற்றுத் தோட்டாவை எடுத்துக்கொண்டு திரும்பவேண்டும் என்பதே அப்போதைய நடைமுறையாக இருந்தது. அந்த அளவிற்கு புலிகள் ஆயுதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். அப்படி புலிகள் மதித்த, நேசித்த தமது ஆயுதங்களை ஒப்படைப்பதென்பது, அதுவும் தமது ஜென்ம விரோதியிடமே ஒப்படைப்பதென்பது, புலி உறுப்பினர்களால் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகவே இருந்தது.


    more
  • உண்மையின் தரிசனம் பாகம்-13
    ஆயுதங்களை ஒப்படைப்பதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைக்காத பட்சத்தில் புலிகளிடம் இருந்து பலவந்தமாக ஆயுதங்களை களையவும் இந்தியப்படைகள் தயாராக இருந்தன.





    அதனால் தமது உயிரிலும் மேலாக புலிகளால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு புலிகள் முன்வந்திருந்தார்கள்.

    1987ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி பாலாலி விமானப்படைத்தளத்தில் விடுதலைப் புலிகளின் முதலாவது ஆயுத ஒப்படைப்பு நடைபெற்றது.

    விடுதலைப் புலிகளின் சார்ப்பில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் யோகரத்தினம் யோகி ஆயுத கையளிப்பின் அடையாளமாக ஒரு கைத்துப்பாக்கியை ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேப்பால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்தார்.

    அதனைத் தொடர்ந்து தமது ~பிக்கப்| வாகனங்களில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கி அணிவகுத்து வந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த ஆயுதங்களை ஒவ்வொன்றாக ஒப்படைத்தார்கள்.


    more
  • உண்மையின் தரிசனம் பாகம்-12
    இந்தியாவின் விடயத்தில் ஆரம்பம் முதலே விடுதலைப் புலிகள் ஓரளவு எச்சரிக்கை உணர்வுடனேயே இருந்து வந்துள்ளார்கள்.




    குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இந்தியா பற்றி அதிக எச்சரிக்கையை தன்னகத்தே கொண்டுள்ளவராகவே இருந்து வந்துள்ளார் என்பதற்கு அந்நாட்களில் வெளியான பல செய்திகள் சாட்சி பகர்வனவாக இருக்கின்றன.

    தனது பிராந்திய மேலாதிக்க நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தியா ஈழத்தமிழ் அமைப்புக்களை வளர்க்க முனைந்ததே தவிர ஈழத்தமிழர்களில் ஒன்றும் அக்கறை கொண்டு அது எந்தக் காரித்தையும் மேற்கொண்டிருக்கவில்லை. இதனை புலிகள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள்.

    இந்தியாவின் இந்த நோக்கத்தை இயன்றவரை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே புலிகளும் எண்ணியிருந்தார்கள்.

    இந்திய அரசியலை அந்த அரசியலில் உள்ள ஓட்டைகளை தமது இன விடுதலைப் போருக்கான ஒரு தளமாக முடியுமான அளவு பயன்படுத்திக் கொள்ளும் திட்டமே புலிகளின் தலைமையிடம் அந்த நேரத்தில் இருந்து வந்துள்ளது.
    நிராஜ் டேவிட்

    more
  • உண்மையின் தரிசனம் பாகம்-11
    இலங்கை வந்த இந்தியப் படையினருக்கு யாழ்ப்பாணச் சூழலும், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை முறையும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.














    முதன் முதலில் இந்திய இராணுவ வீரர்கள் இலங்கையில் தரை இறங்கியபோது, அவர்கள் எதற்காக இங்கு வருகின்றார்கள் என்பது பற்றிய தெளிவு அவர்களுக்கு போதிய அளவு இருக்கவில்லை.
    மிகவும் பரிதாபகரமான ஒரு மனிதக் கூட்டத்தை தாம் இலங்கையில் சந்திக்கப்போகின்றோம் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். இலங்கைப் பிரச்சினை பற்றி இந்தியாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்கள், இலங்கைத் தமிழர்களை ஒரு பரிதாபமான ஜென்மங்களாகவே அவர்களது கற்பனையில் வடித்திருந்தது.
    யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து மிகவும் வறுமையில் பரிதவிக்கும் ஒரு பிரதேசமாகத்தான் யாழ்ப்பாணத்தையும், அங்கு வாழும் மக்களையும் இந்திய ஜவான்கள் கற்பனையில் எதிர்பார்த்து வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் யாழ்பாணத்தில் நடமாடத் தொடங்கிய போது மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்கள்.
    அவர்கள் எதிர்பார்த்து வந்ததற்கு மாறாக யாழ்ப்பாணமும், அங்கு வாழ்ந்த மக்களும் காணப்பட்டார்கள். யாழ்பாணத்தில் இருந்த வீடுகள் அவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தன. யாழ்பாணத் தமிழர்களின் உணர்ந்த வாழ்க்கைத்தரம் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.


    more
  • உண்மையின் தரிசனம் பாகம்-10
    விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சுதுமலை உரை யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியது. உண்மையின் தரிசனம் பாகம்-10













    more

கரும்புலி மறவர் களத்திலே உண்டு

john cena

சிறப்புச் செய்திகள்

வீடியோ

வரலாறு

Blogger இயக்குவது.